21,755 பள்ளி செல்லா குழந்தைகள்: கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டனர்

சென்னை: அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பின்படி 21,755 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது. மாநிலம் முழுவதும், 79, 844 நகர, கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கணக்கெடுப்பின் வவழி, மாநிலம் முழுவதும், 21, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில், கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 1,949 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.