தள்ளாத வயதிலும் தளராத அரியணைக் கனவு

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் முதலமைச்சர் பதவி வகித்த வயது முதிர்ந்த இரு தலைவர்களும் மீண்டும் அப்பதவியைப் பிடிக்க இந்தத் தேர்தலில் அதிக வேகம் காட்டினர். திமுக தலைவர் கருணாநிதி (வலப்படம்) இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் 93ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார். சக்கர நாற்காலிப் பயணம் என்றாலும் சளைக்காமல் தமி ழகம் முழுவதும் சென்று தமது கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்தார். இத்தேர்தலில் வென்றால் ஆறாவது தடவையாக அவர் முதல்வர் பொறுப்பேற்பார்.

கருணாநிதியைப் போலவே 93 வயதான வி.எஸ்.அச்சுதானந்தன் பக்கத்து மாநிலமான கேரளாவில் முதல்வர் நாற்காலியை எதிர்பார்த்து இத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டார். 13 நாட்களில் 13 மாவட்டங்களுக்குச் சென்ற அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 64 பிரசாரக் கூட்டங்களில் பேசி யுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 200 கிலோ மீட்டர் அவர் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். இளம் அரசியல்வாதிகளே வியக்கும் அளவுக்கும் இந்த இருவரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது இந்திய அளவில் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப் படுகிறது. இந்த இரு தலை வர்கள்தான் தென்னிந்தியாவில் ஆக மூத்த அரசியல்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

93 வயதான வி.எஸ்.அச்சுதானந்தன், திமுக தலைவர் கருணாநிதி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்