கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் வேகமான வாக்குப்பதிவு

புதுச்சேரியில் (இந்திய நேரம்) நேற்று மாலை 4 மணி நில வரப்படி 71.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அங்கு காலையில் விறுவிறுப்பாக இருந்த வாக்குப்பதிவு மழை குறுக்கிட்டதால் தொய் வடைந்தது. இருப்பினும் பின்னர் வாக்குப்பதிவு மீண் டும் விறுவிறுப்பானது. பிற் பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 50 விழுக்காடு வாக்கு கள் பதிவாகின. மாலை 5 மணிவாக்கில் அது 80.06 விழுக்காடாக உயர்ந்தது. இதற்கிடையே, திருபுவனை யிலுள்ள செல்லிப்பட்டு வாக்குச்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ்=காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் மூவர் காயமடைந்தனர்.

துணை ராணுவப் படையினர் விரைந்து சென்று இரு கட்சியினரையும் விரட்டி யடித்தனர். இங்கு மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நேற்று தேர்தலைச் சந்தித்த மற்றொரு மாநிலமான கேரளா வில் 140 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு வேகமாக நடை பெற்றது. கேரளாவின் தென் மாவட்டங்களில் மழை கொட் டியபோதிலும் வாக்களிக்க மக்கள் அலைமோதினர். காலை 9 மணி நிலவரப்படி 13.5% வாக்குகள் பதிவாகி இருந்தன.

பின்னர் 11 மணி வரை 28.46% வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 3 மணி அளவில் அது 51.89 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. தொடர்ந்து மாலை 4 மணி யளவில் 61.02% ஆகவும் 5 மணியளவில் 70.35% ஆக வும் வாக்குகள் விறுவிறுப் பாகப் பதிவாகின. இங்கு ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரி கள் முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது அணியாக பாஜக களத்தில் உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!