வாக்களித்து திரும்பிய பெண் மின்னல் தாக்கியதில் பரிதாப பலி

அரியலூர்: வாக்களித்த பின்னர் வீடு திரும்பியபோது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உடல் கருகி பலியானார். ஜெயங் கொண்டத்தைச் சேர்ந்த 38 வயதான வளர்மதி என்ற அப்பெண் நேற்று முன்தினம் மதியம், தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது பலத்த மழை பெய் தது. பின்னர் இடி, மின்னல்களுக்கு மத்தியில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பங்குழி ஓடை அருகே சென்றபோது, திடீரென அவர் மீது மின்னல் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.