தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் - திமுகவிற்குச் சாதகம்

இரு தொகுதிகள் தவிர மீதமுள்ள 232 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று முன் தினம் நிறைவுபெற்ற நிலையில் அன்று மாலை முதலே தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதுவரை வெளியான ஐந்து கருத்துக்கணிப்புகளில் நான்கு திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. டைம்ஸ் நவ்-  சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டும் ஆளும் அதிமுக ஆட்சி யைத் தக்கவைக்கும் என்று கூறி இருக்கிறது. 139 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று அது கணித்துள்ளது.

மாறாக, ஏபிபி, நியூஸ் நேஷன், சாணக்யா, இந்தியா டுடே=ஆக்சிஸ் ஆகியவை திமுக கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. அதிகபட்சமாக, சாணக்யா நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 149 இடங்கள் கிடைக்கும் என்று முன்னு ரைத்துள்ளது. இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான் என்று களமிறங்கிய தேமுதிக= மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 தொகுதிகளில் வென்றாலே பெரிய விஷயம்தான் என்பதை இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

இருப்பினும், இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் 234 தொகுதி களுக்குமானது. இன்னும் இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவே நடக்கவில்லை என்பதால் இவற்றை எப்படி நம்புவது என்று சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளை இந்த நிறுவனங்கள் வெளியிட்டுள் ளன.

அதன்படி, மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் ஆளும் என் ஆர் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்றும் அங்கும் திமுக=காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிட்டும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

கேரளாவில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்ட ணியை வீழ்த்தி இடதுசாரி கூட் டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அசாமில் பாஜக வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாது காப்புப் போடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு