9 வாக்குகளைப் பெற அதிகாரிகள் 360 கிலோ மீட்டர் பயணம்

குமரி: மொத்தமுள்ள ஒன்பது வாக்காளர்களுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 360 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாப புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஒன்று கோதையாறு. இங்குள்ள மின் நிலையத்தில் பணி யாற்றும் அரசு ஊழியர்கள் குடும்பத்தாருடன் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களில் 9 பேர் வாக்காளர்கள் ஆவர். இவர்களுக்காக வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டது.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந் திரம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்கள், பொருட்களுடன் அதி காரிகள் கோதையாறு சென்றனர். எனினும் கோதையாறுக்கு நேரடியான போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் சுற்றுப்பாதையில் அங்கு சென்று திரும்ப 360 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர். எனினும் அதிகாரிகள் இவ்வளவு மெனக்கெட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் தங்களுக்குரிய வசதிகளை செய்து தரவில்லை என்று கூறி 9 வாக்காளர்களும் தேர்தலைப் புறக் கணித்துள்ளனர். இதனால் வாக்குப்பதிவுக்காக சென்ற 12 பேரும் மிகுந்த ஏமாற்றத்து டன் திரும்பினர்.