பாமக: நடக்கக்கூடாதது நடந்துவிட்டது - ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நல்லவர்கள் நினைத்தார்களோ, துரதிருஷ்ட வசமாக அது நடந்துவிட்டதாக பாமக தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த பாமக தலைவர் ராமதாஸ், தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்து பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார். திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்துள்ள தேர்தலைத் தனியாகச் சந்தித்து சட்டமன் றத்துக்குள் காலடி எடுத்து வைத் துவிட்ட பாமக, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலை குனிய வைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கட்சியும், ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர் தலைமையிலான கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து வருவதாகச் சாடியது.

"அந்தக் கட்சிகள் தான் இப்போது முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன என்பது தமிழகத்திற்குப் பெரும் அவமானமாகும். ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல அந்தக் கட்சிகளுக்கு கொள்கை களோ, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற விருப்பமோ சிறிதும் இல்லை. ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஊழல் செய்ய வேண்டும். "ஊழல் மூலம் குவித்த பணத் தில் ஒரு பகுதியை மக்களிடம் வீசி அவர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக் கம். விரைவில் நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து மக்கள் மன் றத்திலும் இந்த இரு கட்சிகளும் தண்டிக்கப்படுவது உறுதி.
அப் போதுதான் குனிந்த தமிழகம் தலைநிமிரும்," என்றார் ராமதாஸ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!