கேரளா, அசாமில் கவிழ்ந்தது காங்கிரஸ்

புதுடெல்லி: ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தல்களிலும் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக 86 தொகுதி களிலும் காங்கிரஸ் 24 தொகுதி களிலும் மற்ற கட்சிகளுக்கு 16 இடங்ளிலும் வெற்றி பெற்றுள்ளன. கிடைத்துள்ளன. நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களிலும் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி காங்கிரசாகத் தான் இருக்கமுடியும். புதுச்சேரி தவிர எல்லா இடங்களிலும் அக் கட்சிக்கு படுதோல்விகளைப் பரிசாக அளித்துள்ளனர் மக்கள்.

கேரளா, அசாம் மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மாநில சட்டசபைத் தேர்தலில் பிரகாசிக்க முடியாமலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், “மக்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தீவிரமாக உழைப்போம்,” என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி. அசாமில் பாஜகவிடமும் கேரளாவில் இடதுசாரிகளிடமும் ஆட்சியைக் காங்கிரஸ் பறி கொடுத்துவிட்டது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் ளார்.