‘மநகூ’ கட்சிகளை வென்ற நோட்டா

சென்னை: தமி­ழக சட்­ட­மன்றத் தேர்­த­லில் மதி­முக, கம்­யூ­னிஸ்ட் கட்­சி­களை­விட நோட்­டா­வுக்கு அதிக வாக்­கு­கள் கிடைத்­துள்­ளது அதிர்ச்சி அளிக்­கிறது. மதி­முக, கம்­யூ­னிஸ்ட்டு கட்­சி­களைவிட நோட்­டா­வுக்கு அதிக வாக்­கு­கள் கிடைத்­துள்­ளது தெரிய வந்­துள்­ளது. இது குறித்­துத் தமி­ழக தலைமைத் தேர்­தல் அதி­காரி ராஜேஷ் லக்­கானி கூறுகை­யில், "தமி­ழக சட்­ட­மன்றத் தேர்­தல் முடி­வு­கள் நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. தேர்­த­லில் வெற்றி பெற்­ற­வர்­களின் பெயர்­களை அர­சி­த­ழில் நேற்று வெளி­யிட்டதும் 232 தொகு­தி­களுக்­கான தேர்­தல் நட­வ­டிக்கை­கள் முடிந்­து­வி­டும்.

"தமி­ழ­கத்­தில் நோட்­டா­வுக்கு 5 லட்­சத்து 56,580 வாக்­கு­கள் கிடைத்­துள்­ளன," என்று ராஜேஷ் லக்­கானி தெரி­வித்­துள்­ளார். கட­லூர் தொகு­தி­யில் பாஜக வேட்­பா­ளர் பி.செல்­வத்தை (1,964) விட நோட்­டா­வுக்கு (2,062) அதிக வாக்­கு­கள் கிடைத்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மதி­மு­க­வுக்கு 3,71,599­ வாக்­கு­கள் கிடைத்­துள்­ளது. மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்டு கட்­சிக்கு 3,07,303 வாக்­கு­களும் இந்­திய கம்­யூ­னிஸ்டு கட்­சிக்கு 3,35,316 வாக்­கு­களும் தமிழ் மாநில காங்­கி­ர­சுக்கு 2,30,711 வாக்­கு­களும் கிடைத்­துள்­ளன. இந்­நிலை­யில் இந்தக் கட்­சி­களைவிட நோட்­டா­வுக்கு அதிக வாக்­கு­கள் கிடைத்­துள்­ளன என்­பதைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!