பரிதாப நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்

சென்னை: இந்தத் தேர்தலில் ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் நிலைமை படுமோசமாகி பரிதாபமாக ஆனது. "மாற்றத்தைத் தாருங்கள்; திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு விடுதலை கொடுங்கள்" என்ற முழக்கத்துடன் தமிழக பாஜக தேர்தல் பிரசாரத் தைத் தொடங்கியது. பிரதமர் மோடியே மெனக்கெட்டு, தமிழகம் வந்து சில பொதுக்கூட்டங்களில் இந்தியில் பேசிவிட்டு சென்றார். இதனால் அவர்களது எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது நிலைமையே தலைகீழானது.

சென்னை தி.நகரில் போட்டி யிட்ட அக்கட்சியின் தேசிய செய லர் எச்.ராஜா, 4,000 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தில் இருந்தார். அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, விருகம்பாக்கம் தொகுதியில் 10,526 வாக்குகளுடன் 3வது இடத்திலும், மாநிலச் செயலாளர் வானதி 11,610 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும் இருந்தனர். இது அக்கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!