பினராயி விஜயன் முதல்வர்; அச்சுதானந்தன் அதிருப்தி

திருவனந்தபுரம்: கேரளா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் கூட் டணி ஆட்சி அமைகிறது. இதையடுத்து முதல்வரை தேர்வு செய்யும் பணி நேற்று திரு வனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக்கூட்டத்தில் நடைபெற்றது. அனைத்து எம்எல்ஏக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினரான பினராயி விஜயன் முதல்வராக தேர்வு பெற்றார்.

இதனால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும் முன்னாள் முதல்வருமான 92 வயது அச்சுதானந்தன் அதி ருப்தி அடைந்தார். அவர் கூட்டத் திலிருந்து அதிரடியாக வெளி யேறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே புதிய ஆட்சி அமைவதற்கு ஏதுவாக தற் போதைய முதல்வரான உம்மன் சாண்டி நேற்று பதவியிலிருந்து விலகினார். இதற்கான பதவி விலகல் கடிதத்தை நேற்றுக் காலை ஆளுநர் சதாசிவத்திடம் அவர் ஒப்படைத்தார்.

திரு அச்சுதானந்தனை தாங்கிப் பிடிக்கும் கட்சித் தொண்டர்கள். படம்: இந்திய ஊடகம்

Loading...
Load next