இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்

கொச்சி: புயலினால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பி யிருக்கிறது. கொச்சியிலிருந்து ‘ஐஎன்எஸ் சுனைனா’, ‘ஐஎன்எஸ் சட்லெஜ்’ ஆகிய கப்பல்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன என்று இந்திய கடற் படை குறிப்பிட்டது. ‘ரோனு’ புயல் இலங்கைக் கடற்கரை பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடும் மழை பெய்ததில் கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலச்சரிவுகள் ஏற் பட்டன. இதில் புதையுண்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. இதுவரை 133 பேரைக் காணவில்லை.