அமித் ஷா: காங்கிரசுடன் சேர்ந்ததால் திமுக தோல்வி

புதுடெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் திமுக தோல்வியுற்றது என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசினார். “கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் என அனைத்து இடங்களிலும் எங்களுடைய கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. “இன்றைய சூழ்நிலையில் காங்கிரசுடன் யார் கூட்டணி அமைத்தாலும் தோற்றுப்போவார் கள். அதை இப்போதைய தேர்தலும் மெய்ப்பித்துள்ளது.

“தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் திமுக தோற்றுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். மத்தியில் நரேந்திர மோடி அரசு வந்த பிறகு பாரதிய ஜனதா ஏழு மாநில சட்டமன்றத் தேர்தல் களைச் சந்தித்தது என்றும் அதில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய மாநி லங்களில் பாஜக வெற்றிபெற்ற தாகவும் அவர் கூறினார். “இப்போது அசாமில் வெற்றி பெற்று இருக்கிறோம். பீகாரில் எங்களுடைய வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. “டெல்லியில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுடைய வாக்கு அளவைத் தக்கவைத்து இருக்கிறோம். “இப்போது கேரளாவிலும் எங்களுக்கு நல்ல வாக்கு கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங் களிலும் கட்சியை வலுவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே நோக்கம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்