அதிமுக, திமுகவை பதம்பார்த்த பாமக

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றி, தோல்வியைப் பாமகதான் நிர்ணயித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர் தலில் லாப, நட்டக் கணக்குகளை ஒவ்வோர் அரசியல் கட்சியும் பார்த்து வருகின்றன. வெறும் 1.1% வாக்கு வித்தி யாசத்தில் திமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்துள்ளது. மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத் தில் பல தொகுதிகளில் திமுக தோல்வியைத் தழுவி உள்ளது. அந்தத் தொகுதிகளில் அதிமுக, திமுக இரு கட்சிகளின் வெற்றி தோல்வியைப் பாமகதான் நிர்ணயித்துள்ளது.

வடக்கு, மேற்கு மாவட் டங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது வன்னியர் சமூகம் தான். இந்தச் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் கட்சி வெற்றி வாகை சூடும். தொடக்கத்தில் வன்னியர் சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக உருவெடுத்த பாமகவிற்கு வன்னியர் ஆதரவு அதிகம் உள்ளது. இதுவரை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வந்த பாமக, முதல் முறையாக இந்தத் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தனித்தே தேர்தலைச் சந்தித்தது.

வடக்கு, மேற்கு மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை வன்னியர் சமூகம்தான் நிர்ணயிக்கிறது. இந்தச் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் கட்சி வெற்றி வாகை சூடும் என்பது பொதுவானது. என்றாலும் இத்தேர்தலில் தனித்து நின்றது பாமக. படம்: ஊடகம்