தேசிய தகுதியை இழக்கும் மா. கம்யூனிஸ்ட்

சென்னை: தமிழகத்தில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்-கு தேசிய கட்சி என்ற தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஜயகாந்த்- வைகோ=வாசன்-=திருமா ஆகி யோரின் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியது. இந்தக் கூட்டணியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான விஜய காந்தின் தேமுதிக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வைப்புத் தொகையை இழந்தது. இந்தக் கட்சிக்கு 2.4 விழுக்காடு வாக்குகளே கிடைத்துள்ளன. வைகோவின் மதிமுகவுக்கு 0.9 விழுக்காடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம் யூனிஸ்டுக்குத் தலா 0.8 விழுக் காடும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டுக்கு 0.7 விழுக்காடும் வாக்குகள் கிடைத்துள்ளன.

இதனால் இந்தக் கட்சிகளின் மாநில அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வரு கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாத தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுக்கு தேசிய கட்சி என்ற தகுதியை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே தேசிய கட்சி என்ற தகுதியைப் பெற்றிருந்தன. கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலத்தில் பெற்ற பலம் காரணமாக மார்க் சிஸ்ட், தேசிய அங்கீகாரத்தைத் தக்க வைத்தது. தற்போது தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாத தால் தேசிய கட்சி என்ற அங்கீ காரத்தை இழக்கும் நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கட்சியின் சின்னமும் முடக்கப்படலாம்.

ஆனால் தேசிய கட்சி தகுதியை இழக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாநில செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். "கேரளா, மேற்கு வங்காளம், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் சிறப்பாகவே செய்து உள்ளது. "புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மாகி தொகுதியில் எங்கள் ஆதரவால் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கமாட் டோம்," என்று அவர் தெரிவித் துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!