தோல்வியால் மொட்டை போட்ட பாமகவினர்

செய்யாறு: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாமக, அந்தக் கட்சி யின் நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி உள்பட அனைவரும் தோல்வி அடைந் தனர். பல தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர். இந்த நிலையில் செய்யாறு தொகுதியில் பாமக வேட்பாளர் சீனுவாசன் 37,491 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

இதனால் அந்த தொகுதியைச் சேர்ந்த பாமகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பாமகவினர் அதிகமுள்ள கிராம மக்களில் 25 பேர் விரக்தி யால் மொட்டை போட்டனர். அங்குள்ள முருகன் கோயிலில் அனைவரும் மொட்டை போட்டுக் கொண்டனர். இதன் மூலம் தேர்த லில் பாமக வேட்பாளர் தோல்வி அடைந்ததை இவர்கள் இந்த வகையில் தேற்றிக்கொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது