கருணாநிதி: தேர்தல் ஆணையத்தின் சதி

சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சா வூரில் நடைபெற இருந்த தேர்தலை தள்ளி வைத்தது திட்டமிட்ட சதி என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஒத்திவைப்பு என்பது திமுகவுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது என்றார்.

"தேர்தல் ஆணையம் ஜெய லலிதாவுக்கு அடிமை ஆணையமாக உள்ளது. அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் தேர்தலை தள்ளிவைத்தது திமுகவுக்கு எதிரான சதி. முன்பே அறிவித்த தேதியில் அவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தாவிட்டால் களத்தில் இறங்கி திமுக போராட்டம் நடத்தும்," என்று கருணாநிதி எச்சரித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகும், தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நின்றபாடில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பணப் பட்டுவாடா நடைபெற்றதற் காக தேர்தலை ஒத்திவைப்பது என்றால், தமிழ்நாட்டில் பல தொகுதிகளிலும் ஒத்தி வைத்தி ருக்க வேண்டும் என கூறியுள்ளார். "தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்தது தேர்தல் ஆணை யத்திற்குத் தெரியாதா என்ன? பணப் பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி பதினைந்து நாட்களாக ஏடுகளில் வராத செய்திகளா? தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?" என கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 13ஆம் தேதி நடத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணை யம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந் துள்ளது. முன்னதாக பணப் பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகார்களின் பேரில் இவ்விரு தொகுதிகளிலும் கடந்த 16ஆம் தேதி நடைபெற இருந்த வாக்குப் பதிவைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!