அதிமுக பிரமுகரின் காதைக் கடித்துத் துப்பிய பாமக பிரமுகர்

தி.மலை: முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரின் காதைக் கடித்துத் துப்பிய பாமக பிரமுகர் மீது திருவண்ணா மலை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வன்னியனூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (35 வயது) என்பவர் ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (35 வயது) என்ற பாமக பிரமுகருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவே, கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் பரசுராமன். இதனால் ஆத்திரமடைந்த பரமசிவன் அவருடன் வாக்குவாதம் செய்ததுடன் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். உச்சகட்டமாக பரசுராமனின் இடது காதை அவர் கடித்து துப்பவே, ஊர் மக்கள் மோதலைத் தடுத்து, பரசுராமனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.