மாற்று அரசியலுக்கான முயற்சியை மக்கள் அங்கீகரிக்கவில்லை: திருமா வருத்தம்

சென்னை: மாற்று அரசியலை முன்னிறுத்தி தாங்கள் மேற் கொண்ட முயற்சிக்கு தமிழக மக்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விஜயகாந்தை முதல்வர் வேட் பாளராக அறிவித்ததால் மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்ததாகக் கூறுவது சரியல்ல என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் தங்களுக்கு எதிராக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாகத் தெரிவித்துள்ள அவர், அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களும் கூட மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

"திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு தேர்தல் களத் தில் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி இறைத்து மக்களையும் ஊழல் கறைபடிந்தவர்களாக ஆக்கிவிட்டார்கள். கொள்கை, கோட்பாடுகளைச் சொல்லி வெற்றி பெற்று வந்த திமுகவும் நம்பிக்கை, கவர்ச்சி ஆகியவற்றால் வெற்றி பெற்று வந்த அதிமுகவும் முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு இருக்கி றது," என்று திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!