வைகோ: தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத விபரீதம் நிகழ்ந்துள்ளது

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வும் அதிமுகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றிருப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார். இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத விபரீதம் நடந்துள்ளதாக அவர் கூறினார். தேமுதிக, மக்கள் நலக்கூட் டணி, தமாகா அணி சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த அணிக்கு ஓரிடத்தில் கூட வெற்றி கிடைக்க வில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து இந்த அணியின் தலை வர்கள் நேற்று முன்தினம் சென்னையில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தேமுதிக தலைமை அலுவலகத் தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் ஒரு கோடிக்குச் சமம் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!