புதுவை துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு அடைந்த நிலையில் புதுவை துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அதிபர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் வேட் பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டவர் கிரண் பேடி. எனினும் அத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இந்நிலையில் புதுவை துணை நிலை ஆளுநராக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் கிரண் பேடி நியமிக்கப் பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்றுக்கொள்ள இருப்பதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.