புதுக்கோட்டை: இருதரப்பினர் இடையே மோதல், போலிசார் குவிப்பு

புதுக்கோட்டை: இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதுக்கோட்டையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கறம்பக்குடி கருப்பட்டியைச் சேர்ந்த சொக்கலிங் கம் அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கினார். தேர்தலில் அவருக்கு சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. இதுவே அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தோல் விக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் தங்களது எதிர்த்தரப்பு மிரட்டுவதாக காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை யில் இருந்து கறம்பக்குடி சென்ற அரசுப் பேருந்து மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ராமலிங்கம் என்ப வரது தேநீர்க் கடைக்குள் புகுந்த சிலர் கடையை சூறையாடினர். இத்தகைய மோதல் சம்பவங்கள் தொடர்பில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரித்து வருகின்றனர். எனினும் பதற்றம் நீடிப்பதால் இருநூறுக்கும் மேற்பட்ட போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Loading...
Load next