கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு: 14 நாடுகளிடம் விவரம் கேட்கிறது இந்தியா

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனங்களின் சொத்துகள், வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அளிக்கும்படி 14 நாடுகளிடம் இந்திய அமலாக்கத் துறை கேட்டுள்ளது. சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக், செக்வோவியா, வெஸ்ட்பிரிட்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் கார்த்திக்கும் தொடர்பு இருப்ப தாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, அந்த நிறுவனங்களின் சொத்துகள், வங்கிப் பரி வர்த்தனைகள் பற்றிய விவரங்களைத் தந்து உதவுமாறு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளை இந்திய அமலாக்கத் துறை நாடி உள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி குறிப்பிடுகிறது.

அத்துடன், கார்த்தியினுடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து கூடிய விரைவில் அவரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், "எனது எல்லாச் சொத்துகளும் கடன் பொறுப்பு களும் எனது கணக்கேடுகளில் முறையாகப் பதிவு செய்யப்பட் டுள்ளன. இன்று வரையிலும் முறையாக வருமான வரித் தாக் கல் செய்துள்ளேன். இது குறித்து எந்தவொரு சட்டபூர்வமான அல்லது ஒழுங்குமுறை ஆணையமும் சட் டத்திற்குட்பட்ட வகையில் தகவல் கோரினால் உரிய தகவல்களை வழங்க நான் தயார்," என்று கூறியுள்ளார் கார்த்தி. தம்முடைய மகன் அப்பாவி என்றும் தம்மைப் பழிவாங்கும் நோக்கிலான பாஜக அரசின் துன்புறுத்தல் நடவடிக்கை இது என்றும் ப.சிதம்பரம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!