ஈரான் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம்

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்­திர மோடி ஈரானுக்­கு மேற்கொண்டுள்ள தமது இரண்டு நாள் பய­ணத்­தின்­போது, சாப்ஹார் துறைமுக மேம்பாட்டு ஒப்­பந்தம் கையெழுத்­தா­வது தவிர இரு நாடு­களுக்கு இடை­யே­யான பொரு­ளா­தார ஒத்­துழைப்பை மேம்படுத்­து­வதே தனது பயணத்தின் நோக்கம் என்று மோடி கூறி­யுள்­ளார். ஈரான் தலை­ந­கர் டெஹ்­ரா­னில் உள்ள மெஹ்­ரா­பாத் அனைத்துலக விமான நிலை­யத்­துக்கு நேற்று முன்தினம் சென்றடைந்த மோடியை அந்­நாட்டு நிதி­யமைச்­சர் அலி தய்­யே­பி­னியா வர­வேற்­றார். மோடி­யு­டன் மத்திய தரைவழிக்- கப்பல் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் நிதின் கட்­க­ரி­யும் ஈரான் சென்­று உள்­ளார். பிறகு இரு­வ­ரும் இந்திய வம்­சா­வ­ளி­யி­னரைச் சந்­திப்­ப­தற்­காக அங்­குள்ள சீக்கிய குருத்து­வா­ரா­வுக்­குச் சென்று வழி­பட்­ட­னர். பிர­த­மர் மோடிக்கு நேற்று காலை ஈரான் அரசு சார்பில் பாரம்ப­ரிய வர­வேற்பு அளிக்­கப்­பட்டது. அதன்­பி­றகு, ஈரான் அதிபர் ஹஸன் ரெள­ஹா­னி­யு­டன் அதி­கா­ரப்­பூர்வ பேச்­சு­ வார்த்தை நடை­பெ­ற்றது. அதைத் தொடர்ந்து மோடிக்கு ஈரான் அதிபர் மதிய விருந்து அளித்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சதாபாத் மாளிகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடது) நேற்று ஈரான் அதிபர் ஹஸன் ரெள­ஹா­னி­யைச் (வலது) சந்தித்து ஈரான் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் குறித்து உரையாடினார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!