ரொட்டிகளால் புற்று நோய் அபாயம்

புது­­­டெல்லி: பிரபல நிறு­­­வ­­­னங் களின் ரொட்­­­டி­­­களில் புற்­­­று­­­நோயை ஏற்­­­படுத்­­­தும் ரசாயன பொருட்­­­கள் இருப்­­­பது கண்ட­­­றி­­­யப்­­­பட்­டதை அடுத்து அது­கு­றித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா உத்­­­த­­­ர­­­விட்­­­டார். பிரபல நிறு­­­வ­­­னங்களின் ரொட்டி தயா­­­ரிப்­­­பு­­­களில் புற்று நோயை உரு­­­வாக்­­­கும் ரசாயன பொருட்­­­கள் இருப்­­­ப­­­தாக வெளி யாகி உள்ள தகவல் நாடு முழு­­­வ­­­தும் பெரும் அதிர்­­­வலையை ஏற்­­­ படுத்தி இருக்­­­கிறது. இது­­­பற்றி மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறுகை­­­யில், "இந்த விஷ­­­யத்தை உட­­­ன­­­டி­­­ யாக கவ­­­னத்­­­தில் எடுத்­­­துக்­­­கொண்­­­டோம்.

இது தொடர்­­­பாக உட­­­ன­­­டி­­­யாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்­­­யு­­­மாறு எனது இலாகா அதி­­­கா­­­ரி­­­களை கேட்டுக் கொண்டு இருக்­­­கி­­­றேன். இது­­­பற்றி பீதி கொள்ளத் தேவை­­­யில்லை. விரைவில் விசாரணை அறிக்கை வந்­­­து­­­வி­­­டும்,'' என்று குறிப்­­­பிட்­­­டார். மத்திய அறி­­­வி­­­யல், சுற்­­­றுச்­­­சூ­­­ழல் மையத்­­­தின் ஆய்வு முடிவு குறித்து மத்திய உணவுப் பாது­­­காப்பு, தர நிர்ணய ஆணை­­­யத்­­­தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் குமார் அகர்­­­வால் உட­­­ன­­­டி­­­யாக ஓர் அறி­­­விப்பை வெளி­­­ யிட்­­­டார்.

அதில், ''பொட்­­­டா­­­சி­­­யம் புரோ­­­மேட்டை உணவு பொருட்­­­களில் சேர்க்­­­கக் கூடாது என்று அறி­­­வி­­­யல் மற்றும் சுற்­­­றுச்­­­சூ­­­ழல் மையம் பரிந்­­­துரை செய்து உள்ளது. ஏற்­­­க­­­னவே இதை சேர்க்கை பட்­­­டி­­­ய­­­லில் இருந்து அகற்­­­றி­­­விட முடிவு செய்து இருக்­­­கி­­­றோம். இது­­­பற்­­­றிய அறி­­­விக்கை விரை வில் வெளி­­­யி­­­டப்­­­படும். பொட்­­­டா­­­சி­­­யம் அயோடேட் பற்றி ஆய்வு நடத்தி வரு­­­கி­­­றோம். இது­­­கு­­­றித்­­­தும் விரைவில் முடிவு எடுக்­­­கப் ­­­படும் என்று தெரி­­­வித்­­­தார். நாடு முழு­­­வ­­­தும் விற்பனை செய்­­­யப்­­­படும் பிரபல ரொட்டி நிறு­­­வ­­­னங்களின் தயா­­­ரிப்­புத் தரம் குறித்து அண்மை­­­யில் தன்னார்வ தொண்டு நிறு­­­வ­­­னம் ஒன்றின் அறி­­­வி­­­யல் மற்றும் சுற்­­­றுச்­­­சூ­­­ழல் மையம் ஆய்வு மேற்­­­கொண்டது. இதற்­­­காக டெல்­­­லி­­­யில் விற்பனை செய்­­­யப்­­­பட்ட பிரிட்­­­டா­­­னியா, ஹார்­­­வெஸ்ட் கோல்ட், கே.எப்.சி., பீசா ஹட், டொமினோஸ், சப்வே, மெக்­­­டொனால்டு, சிலைஸ் ஆப் இத்தாலி உள்­­­ளிட்ட 38 நிறு­­­வ­­­னங்களின் பாக்­­­கெட்­­­டு­­­களில் அடைக்­­­கப்­­­பட்ட ரொட்டி, 'பன்' போன்றவை ஆய்­­­வுக்கு எடுத்­­­துக் கொள்­­­ளப்­­­பட்­­­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!