திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு முதல் நாள் வாழ்த்து, மறுநாள் வணக்கம் கூறிய ஜெயலலிதா

சென்னை: சட்டப்பேரவையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஜெயலலிதா வணக்கம் தெரிவித்தது பேரவை உறுப்பினர்களை ஆச்சரியப்பட வைத்தது. 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்கள் எம்எல்ஏக்க ளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதற்காக நேற்று காலை பேரவைக்கு வந்தார் முதல்வர் ஜெய லலிதா. அப்போது எதிர்க்கட்சி உறுப் பினர்களுக்கான பகுதியில் மு.க.ஸ்டா லின் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் முதல்வர் ஜெயலலிதா வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்டாலினும் மரியாதை நிமித்தமாக முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தார்.

இக்காட்சியைக் கண்ட ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சி உறுப்பினர் களும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். கடந்த ஆட்சிக் காலத்தில் இரு கட்சியினரும் பல்வேறு விதங்களில் மோதல் போக்கை கடை பிடித்தனர். அந்நிலை மாறி, முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றார் ஸ்டாலின். அதன் பிறகு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகத்தின் மேம் பாட்டிற்காக செயல்பட மு.க.ஸ்டாலி னுக்கும், திமுகவுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அதன் பின் னர் வணக்கம் தெரிவித்த படலமும் அரங்கேறி உள்ளது. இதன் மூலம் இருதரப்பும் ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திட்டுள்ளதாக அரசியல் நோக்கர் கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய போக்கு நீடிக்குமானால் மக்கள் நலத் திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் குறித்து பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடை பெறும் என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!