பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற ஜெயலலிதா

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி யேற்றுக் கொண்டார். இதைய டுத்து அதிமுக, திமுக, காங் கிரஸ் உறுப்பினர்களும் சட்டப் பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட் சியைத் தக்க வைத்துக் கொண் டது. இதையடுத்து அக்கட்சிப் பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகத் தேர்வு பெற்றார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 15ஆவது சட்டப்பேரவை நேற்று காலை கூடியது. இச்சமயம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காலை 11 மணிய ளவில் அவை நடவடிக்கைகள் தொடங்கின. தற்காலிக சபா நாயகர் செம்மலை அவையை வழிநடத்தினார். முதல்வர் ஜெயலலிதா அவைக்குள் நுழைந்தபோது அதிமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகரங்களையும் கூப்பி வணங்கினார் ஜெயலலிதா.