2 மணி நேரம் காத்துக்கிடந்த ‘குடிமகன்கள்’

தமிழக அரசுக்குச் சொந்தமான மதுக்கடைகள் இனி காலை 12 மணிக்குதான் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை அறியாத குடிகாரர்கள் பலர் நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை 10 மணிக்கே மதுக்கடைகளுக்கு வந்து ஏமாற்றமடைந்தனர். பலர் பூட்டிக்கிடக்கும் மதுக்கடைகளுக்கு வெளியே 2 மணி நேரம் காத்துக் கிடந்தனர். படம்: ஊடகம்