என் ஆட்சியில் ஊழல் இல்லை - மோடி

வா‌ஷிங்டன்: இந்தியாவில் மத்திய அரசாங்கத்தை அமைத்து இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘த வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி யில் திரு மோடி இவ்வாறு கூறி யிருக்கிறார். “பொருளியல் வளர்ச்சிக்கு நிறைய சீர்திருத்தங்களைச் செய் துள்ளேன். முந்தைய ஆட்சி யாளர்களால் செய்ய இயலாத சீர் திருத்தங்களை நான் அமல் படுத்தியுள்ளேன். ஆனால் இன்ன மும் பெரும் பணிகள் காத்திருக் கின்றன,” என்று அவர் குறிப் பிட்டார்.

அதிவேக பொருளியல் வளர்ச் சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறிய அவர், “அதில் அந்நிய நேரடி முதலீடு தாராளமயமாக்கல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளும் உள்ளடக்கம்,” என்றார். “லஞ்ச, ஊழல் இல்லாததால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் துவங்க எளிய வழி வகைகளை செய்துள் ளோம். இதன் மூலம் பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது,” என்றும் அவர் சொன்னார். சரக்கு, சேவை வரி குறித்துப் பேசிய திரு மோடி, “அந்த மசோதா விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் இந்திய பொருளியல் வளர்ச்சி உச்சத்தை எட்டும்,” என்றார் அவர்.

ஊழல் தடுக்கப்பட்டதால் வெளிநாட்டவர்கள் தொழில் தொடங்கும் வழிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. கோப்புப் படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்