உடலில் 366 நாடுகளின் கொடிகள்

உடல் முழுவதும் 366 நாடுகளின் கொடிகள் இந்தியாவைச் சேர்ந்த ஹர் பர்காஷ் ரி‌ஷி (படம்), வயது 74, தனது உடல் முழுவதும் 366 நாடுகளின் கொடிகளைப் பச்சைக் குத்தி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். அவரது பற்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதால் 50 எரியும் மெழுகுவத்திகளை ஒரே சமயத்தில் தனது வாயில் வைத்து சாகசம் செய்து காட்டுகிறார். இருபதுக்கும் மேற்பட்ட உலகச் சாதனைகளை கையில் வைத்திருக்கும் இவர், தன்னை 'கின்னஸ் ரி‌ஷி' என்றே அழைத்துக்கொள்கிறார்.

புதுடெல்லியில் 1942ல் பிறந்த ரி‌ஷி, 1990ல் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து 1,001 மணி நேரம் ஸ்கூட்டர் ஓட்டி முதல் கின்னஸ் சாதனையைப் படைத்தார். அதிலிருந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டார். தக்காளிச் சாறு (டமாட்டோ கெட்சப்) நான்கு நிமிடங்களில் விழுங்கியது, புதுடெல்லியிலிருந்து சான் ஃபிரான்சி-ஸ்கோ நகருக்கு 'பிட்சா' விநி யோகித்தது போன்றவை அவரது சாதனைகளில் சில. உலகிலேயே ஆகச் சிறிய உயில் எழுதியும் அவர் சாதனைப் படைத்திருக்கிறார். 'எல்லாம் என் மகனுக்கு' என்பதே அவர் எழுதிய உயில். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!