ஒரு தொகுதியில் கூட தேர்தல் வைப்புத்தொகையை இழக்காத திமுக

சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மட்டுமே ஒரு தொகுதியில் கூட தேர்தல் வைப்புத் தொகையை இழக்கவில்லை. அக்கட்சி 174 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வென்றது. எனினும் மீதமுள்ள தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததால் திமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை தக்க வைத்துக் கொண்டனர். தேமுதிக வேட்பாளர்களில் ஒரே ஒருவரைத் தவிர, மற்ற வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர். அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூட வைப்புத் தொகையை இழந்தார். அதிமுக வேட்பாளர்கள் இருவர் வைப்புத் தொகையை இழந்தனர்.

மதிமுகவின் 25, தமாகாவின் 27, விசிகவின் 22, பாமகவின் 212, சிபிஐயின் 22, சிபிஎம்மின் 25 வேட்பாளர்களுக்கும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. ஒரு தொகுதியில்கூட வைப்புத் தொகையை இழக்காத கட்சி என்ற பெருமை திமுகவுக்கு கிடைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!