கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

சென்னை: தமக்கு வாக்களித்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் நன்றி தெரிவித்தார். கடந்த இரு தினங்களாக கொளத்தூரில் திறந்த வாக னத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்குப் புன்னகை யுடனும் கூப்பிய கரங்களுடனும் நன்றி தெரிவித்த அவருக்கு அப்பகுதி மக்களும் திமுக வினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு 89 தொகுதிகளில் வெற்றி கிடைத் துள்ளது. அக்கட்சிப் பொருளாள ரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களம் கண்டார்.

ஏற்கெனவே இத்தொகுதி எம்எல்ஏவாக சிறப்பாக பணி யாற்றிய அவருக்கு இம்முறையும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத் துள்ளது. இதையடுத்து மீண்டும் தன்னை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு முகநூல் வழி நன்றி தெரிவித்திருந்தார் ஸ்டாலின். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தொகுதி மக்க ளுக்கு நேரில் சென்று மீண்டும் தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார் ஸ்டாலின். இதற்காக வீதி வீதியாக திறந்த வாகனத்தில் சென்ற அவருக்கு கொளத்தூர் மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.

கரம் கூப்பிய நிலையில் மு.க.ஸ்டாலின் படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது