29 ஆண்டுகளாக நூறு விழுக்காடு தேர்ச்சி

ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முழுத் தேர்ச்சி பெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி தொடர்ந்து பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்று வருவது அப்பகுதி பெற்றோர்களை மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளையும் அசர வைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ரேவதியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

அதற்கு பதிலளித்த அவர், “மாணவிகளை நான்கு விதமாக தரம் பிரிப்போம். நன்கு படிப்ப வர்கள், சராசரி, மெல்ல கற்போர், மிக மெல்ல கற்போர் என நான்கு வகையில் பிரிப்போம். “இதில் மெல்ல, மிக மெல்ல கற்கும் மாணவிகள்தான் தேர்ச்சிக் கான குறைந்த மதிப்பெண் பெறக் கூட சிரமப்படுவார்கள். “அவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம். அவர்களுக்குப் புரியும் படியும் புரியும் வரையும் பாடம் சொல்லிக் கொடுப்போம். மேலும் பள்ளி நேரம் தவிர கூடுதல் வகுப்புகள் எடுப்போம்.

“முக்கியமாக ஒன்பதாவது வகுப்பில் அந்த ஆண்டு பாடத்தை மட்டும்தான் எடுப்போம். “படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் விளையாட்டு, இதர தனித்திறமைகளிலும் கவனம் செலுத்துவோம். “இந்த ஆண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வில் எங்கள் பள்ளி யில் முதல் மதிப்பெண் 489. கடைசி மதிப்பெண் 290. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்கள்.2016-05-27 06:00:08 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்