தேர்தல் பணப் பட்டுவாடா: கட்சிகள் பயன்படுத்திய ஆட்கள்

சென்னை: அதி­காலை­யில் வீட்­டுக்கு வீடு சென்று பால் பொட்­ட­லம் போடு­ப­வர், செய்­தித்­தாள் போடு­ப­வர்­கள் தேர்­தல் பணப்­பட்­டு­வா­டா­வுக்கு அதி­க­மா­கப் பயன்­படுத்­தப்­பட்ட ஆட்­கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. இவர்­களு­டன் வேலைக்­குச் செல்­லா­மல் வீட்­டில் இருக்­கும் பெண்­களும், ரௌடி­களும் பணப்­பட்­டு­வாடா பணிக்கு ஈடு­படுத்­தப்­பட்­ட­னர் என்று தேர்­தல் ஆணை­யம் கூறி­யுள்­ள­தாக செய்­தி­கள் கசிந்­துள்­ளன. தேர்­தல் ஆணை­யத்­தின் பொதுத் தேர்­தல் பிரிவு அதி­கா­ரி­கள் இது­தொ­டர்­பாக ரக­சிய அறிக்கை ஒன்றைத் தயா­ரித்து அதைத் தலைமைத் தேர்­தல் ஆணை­யத்­தில் வழங்­கி­யுள்­ள­னர். இதில் தமி­ழ­கத்­தில் எப்­ப­டி­யெல்­லாம் பணம் விநி­யோ­கிக்­கப்­பட்­டது என்­பது குறித்து அவர்­கள் அதில் விவ­ரித்­துள்­ள­னர். படித்­துப் பார்த்­தால் அடேங்கப்பா என்று ஆச்­ச­ரி­யப்­படும் அள­வுக்கு நமது கட்­சி­கள் தில்­லா­லங்க­டி­களைச் செய்­துள்­ளன.

உத்­தி­களை மாற்­றிய கட்­சி­கள் வழக்­க­மாக கட்­சி­யி­னர்­தான் வீடு வீடா­கப் போய் தங்களுக்­குச் சாத­க­மா­னவர்­களுக்­குப் பணம் கொடுப்பது வழக்­க­மாக இருந்து வந்தது இத்தனை கால­மும். ஆனால் இந்த முறை கட்­சி­கள் உத்­தி­களை மாற்றி விட்­ட­ன. பால்­கா­ரர்­கள், செய்­தித்­தாள் விநி­யோ­கிப்­பா­ளர் உள்­ளிட்­டோரை இந்த முறை தங்க­ளது பணிக்­குக் கூட்­டுச் சேர்த்­துள்­ள­னர். உள்­ளூ­ரில் உள்ள கட்­சி­களைச் சேர்ந்த மற்­றும் கட்­சி­களுக்­குச் சாத­க­மான ரௌடி­களை­யும் பணம் கொடுக்­கும் பணி­யில் அமர்த்­தி­யுள்­ள­ன­வாம் கட்­சி­கள். 5,825 புகார்­கள் தேர்­தல் தொடர்­பாக மொத்தம் 5,825 புகார்­கள் வந்­துள்­ளன. அதில் 5,463 புகார்­கள் ஏற்­கப்­பட்டு முதல் தக­வல் அறிக்கை பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு