எதிர்க்கட்சிக்கு பெரிய அறை வேண்டும்

சென்னை: “தமிழக சட்டமன்றத்தில் திமுக சார்பில் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உட்காருவதற்கு வசதியாக தலைமைச் செயலகத்தில் பெரிய அறை ஒதுக்க வேண்டும்,” என்று நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்று, தலைமைச் செயலக வளாகத்தில் திமுகவுக்குப் பெரிய அறை ஒதுக்கப்பட உள்ளது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை இரண்டாக பிரிக்கப்பட்டுக் காங்கிரசுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது தேமுதிக மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கிய அறைகளை ஒன்றாக மாற்றி திமுகவுக்கு வழங்கலாம் என்று சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த அறைகளை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் நேற்று பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் சைரன் பொருத்திய கார், ஓட்டு நர் மற்றும் தனி உதவியாளர் போன்ற சலுகை வழங்கப் படும். சட்டப்பேரவை வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக் களுக்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது சபாநாயகரின் முடிவுக்கு உட்பட்டது ஆகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு