பண விநியோகம்: அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் ரத்தானது

புதுடெல்லி: அரவக்குறிச்சி, தஞ்சா வூர் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட் டுள்ளது மத்திய தேர்தல் ஆணையம். இரு தொகுதிகளிலும் பணம் மிகத் தாராளமாக தனது ஆதிக் கத்தை செலுத்தியுள்ளதாக தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் நிலைமை சீரான பிறகே தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், இவ்விவகாரத் தில் தமிழக ஆளுநர் தலையிட்ட தற்கு அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த மே 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற் றது. அரவக்குறிச்சியிலும் தஞ்சா வூரிலும் பணப்பட்டுவாடா நடந்த தற்கான சான்றுகள் கிடைத்ததை யடுத்து இவ்விரு தொகுதிகளுக் கான தேர்தல் மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, உயர்நீதிமன்றத்தை அணு கியது. இந்த வழக்கு விசாரணை யின்போது இரு தொகுதிகளிலும் ஜூன் 13ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பே இரு தொகுதிகளுக்குமான தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழி வலியுறுத்தினார் தமிழக ஆளுநர் ரோசய்யா. இத்தகைய சூழ்நிலையில், அரவக்குறிச்சி தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை காலவரையின்றி ஒத்தி வைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள் ளது தேர்தல் ஆணையம்.