வெளிமாநில ரகசிய போலிசார் கண்காணிப்பு: வேலூரில் பரபரப்பு

வேலூர்: தீவிரவாத கும்பல் தங்கியிருப்பதாகவும் அவர்களைப் பிடிக்க வெளிமாநில ரகசிய போலிசார் முகாமிட்டுள்ளதாகவும் வெளியான தகவல் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வெளிமாநில ரகசிய போலிசார் வேலூருக்கு வந்துள்ளது குறித்து தமக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் வேலூரில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அம்மாவட்டத்தில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.