இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; சிங்கப்பூர் ஊழியர் பலி

சேலம்: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய கோர விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், கல்லேரிப்பட்டியைச் சேர்ந்தவர் சாருஹாசன், 19. இவரது நண்பர் ஆனந்தபாபு, 26, சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். ஷாருஹாசனும் சிங்கப்பூரில் பணியாற்ற விரும்பியதால், அவரை அழைத்துச் செல்ல கல்லேரிப்பட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்திருந்தார் ஆனந்தபாபு. இருவரும் வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றனர். அப்போது பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் இருவர் மீதும் பயங்கர வேகத்தில் மோதியதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய காரும் அதே பள்ளத்தில் விழுந்தது. இதில் சாருஹாசன், ஆனந்தபாபு, காரில் பயணம் செய்த மேலும் மூவர் என ஐவர் உடல் நசுங்கி இறந்தனர்.