அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா வலியுறுத்து

ராணிப்பேட்டை: தமிழக அரசு மதுக்கடைகளை ஒரே மூச்சாக மூட வேண்டும் என பாரதிய ஜனதா தேசியச் செயலர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், சில கடை களை மூடுவதாலும் கடைகள் இயங்கும் நேரத்தைக் குறைப்ப தாலும் எந்தவிதப் பலனும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார். "அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலிலும் பாஜக வுக்கான ஆதரவு அதிகரித் துள்ளது. அசாம் மாநிலத்தில் வெறும் நான்கு விழுக்காடு வாக்குகளை மட்டுமே கொண்டி ருந்த பாஜக, முதன் முறையாக அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.

"கேரளாவில், ஆறு விழுக்காடு வாக்குகள் மட்டுமே பாஜகவுக்கு இருந்தது. இந்தத் தேர்தலில், 15 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற துடன், அம்மாநில சட்டப்பேரவை யிலும் முதன் முதலாக, தன் கணக்கை துவக்கியுள்ளது," என்றார் எச்.ராஜா. தமிழகத்தில், 2.8 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இம் முறை திமுக ஆட்சிக்கு வந்து விடுமோ எனப் பயந்து அதிமுக வுக்கு வாக்களித்தவர்களே அதி கம் என்றார்.

"இல்லையெனில் அதிமுக வுக்கான வாக்குகள் குறைந்தி ருக்கும். ஏனென்றால், கருணா நிதியைக் கண்டாலே எல்லாருக் கும் பயம் உண்டு. "ஐநூறு மதுக்கடைகளை மட்டுமே மூடுவதால் எந்தவிதப் பலனும் இல்லை. அதை விடுத்து, பள்ளி, கல்லூரி, கோவில்கள், பொது மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும். என்னைப் பொறுத்தவரை, மதுவிலக்கு என் றால், மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண் டும்," என்று எச்.ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!