வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசி பயன்படுத்த தடை

சென்னை: வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசி பயன்படுத்த கூடாது என தமிழக பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், இதுபோன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பள்ளிச் சூழலானது மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் இடங்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.