கொதிகலன் வெடித்து 12 பேர் பலி

மும்பை: தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மும்பைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தானே மாவட்டத்தில் இயங்கி வரும் அத்தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஒரு எரிவாயுத் தோம்பு திடீரென வெடித்தது. அதனை அடுத்து மற்ற தோம்புகளும் வெடித்துச் சிதறியதில் தொழிற்சாலையின் ரசாயன கொதிகலனும் வெடித்தது. இதில் தொழிற்சாலைக் கட்டடம் தரைமட்டமானது. இடுபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். இந்த விபத்தில் 12 பேர் பலியான நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகள் அதிர்ச்சியில் குலுங்கின.