நன்கொடை ரத்தத்தில் கலப்படம்; அறுவர் கைது

ஹைதராபாத் நகரில் நன்கொடை ரத்தத்தில் கலப்படம் செய்து ஒரு பொட்டலம் ரத்தத்தை இரண்டு பொட்டலங்களாகப் பிரித்து விற்ற விவகாரத்தில் ஆறு பேரை போலி சார் தடுத்து வைத்து உள்ளனர். கோட்டி மகப்பேறு மருத்துவ மனையிலும் தனியார் ரத்த வங்கி களிலிலும் பணியாற்றிய சோத னைச்சாலை தொழில் நுட்பர்களான கே. நரேந்திர பிரசாத், டி. நாக ராஜு, கே. ரமேஷ், ராகவேந்திர ராகவ் உட்பட ஆறு பேரை கைது செய்த சுல்தான் பசார் காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரக்‌ஷிடா ரத்த வங்கியின் உரிமையாளர் சவுமியா ரெட்டி, பாலாஜி ரத்த வங்கியின் நிர்வாகி பி. நரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்கும். இவர்களில் தொழில்நுட்பரான நரேந்திர பிரசாத், ஒரு பொட்டலம் ரத்தத்தை இரண்டு பொட்டலங் களாக மாற்றுவதில் கைதேர்ந்த வராம். நன்கொடையாகப் பெறப்பட்ட ரத்த பொட்டலத்திலிருந்து பாதி ரத்தம் ஊசி மூலம் உறிஞ்சப்பட்டு காலி பொட்டலத்தில் பாதியளவு நிரப்பப்படுகிறது.

பின்னர் இரண்டு பொட்டலங் களிலும் ‘சைலன்’ திரவம் சேர்க்கப்பட்டு முழுப்பொட்டலங் களாக மாற்றப்படுகின்றன என்று காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. “இந்தப் பொட்டலங்களில் தனியார் ரத்த வங்கிகளின் பெயர் பதிக்கப்பட்டு சந்தேகம் ஏற்படாத வகையில் நோயாளிகளுக்கு விற்கப்படுகிறது. “ஒரு பொட்டலத் துக்கு நூறு ரூபாயை அவர்கள் முகவர் கட்டணமாக பெற்றுக் கொண் டனர்,” என்று காவல் துறையினர் கூறினர். சுல்தான் பசார் போலிஸ் நிலைய ஆய்வாள ரான பி. ‌ஷிவ ஷங்கர் ராவ், “கோவ்லிகுடாவில் தனியார் ரத்த வங்கிகளின் பெயரில் போலி ஒட்டு வில்லைகள் அச்சடிக்கப்பட்டன,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்