தமிழகம்: கொத்தடிமைகளாகப் பணியாற்றிய 318 பேர் மீட்பு

தமிழகத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றிய 88 குழந்தைகள் உட்பட 318 பேரை அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், புதுக் குப்பத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அந்தத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப் படுத்தப்பட்டதாகவும் ஆனால் 12 ரூபாய் மட்டுமே ஊதியமாகத் தரப் பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அந்த ஊழியர்களின் அவல நிலையை அறிந்த 'அனைத்துலக நீதி இயக்கம்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், உடனடியாக அது பற்றி மாவட்ட நிர்வாகத் திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் குழு கடந்த சனிக்கிழமை அந்தச் செங்கல் சூளையில் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தி, கொத்தடிமை களாக இருந்தவர்களை மீட்டனர். கடந்த நவம்பரில் அவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட் டனர். ஒரு நாளைக்கு ரூ.350 முதல் 400 வரை கொடுப்பதாக உறுதியளித்து, ஒரு குடும்பத்திற்கு ரூ.12,000 வீதம் முன்பணம் கொடுத்து இடைத்தரகர்கள் அவர் களை அழைத்து வந்துள்ளனர். ஆனால், செங்கல் அறுப்போ ருக்கு 200 ரூபாயும் லாரிகளில் செங்கல்களை ஏற்றுவோருக்கு 240 ரூபாயும் வார ஊதியமாக தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட வடமாநிலக் குடும்பங்களுக்கு உணவும் பணமும் கொடுத்து ரயில் மூலம் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!