12ஆம் வகுப்பை தாண்டாத 15 தமிழக அமைச்சர்கள்

சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 பேர் பனிரெண்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து தமிழக அமைச்சரவையில் 33 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களைப் பற்றிய விவரங்களை தமிழ் நாடு எலெக்‌ஷன் வாட்ச், ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. அமைச்சர்களில் 18 பேர் பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் முடித்துள்ளனர். இவர்களில் 8 பேர் முதுகலை பட்டப் படிப்பும், நான்கு பேர் தொழிற்கல்வி பட்டப்படிப்பும் முடித்தவர்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 18 பேரில் ஒருவர் எட்டாம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். ஏழு பேர் பத்தாம் வகுப்பும் ஏழு பேர் 12ஆம் வகுப்பும் படித்துள்ளனர். மொத்தம் ஒன்பது அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்களில் 4 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கி றது. நடப்பு அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்களில் 26 பேர் கோடீஸ் வரர்கள். 113.73 கோடி ரூபாய் சொத்துக் களுடன் முதலிடத்தில் உள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ரூ.31.75 லட்சத்துடன் இப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார். அமைச்சரவையில் உள்ள இருபது பேர், 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 25 முதல் 40 வயதுக் குட்பட்டவர்கள் 9 பேர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!