நாக்பூர் அருகில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு நேற்று திடீர் என்று தீப் பற்றி எரிந்ததில் 20 ராணுவத்தினர் மாண்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத் தில் உள்ள புல்காவான் என்னும் இடத்தில் இரவில் பற்றி எரிந்த தீயை அணைக்க தீயணைப் பாளர்கள் பல மணிநேரம் போரா டினார்கள். நேற்றுக் காலை 6.15 மணி யளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதிலும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவரவர் வீட்டிலிருந்து வெளி யேற்றப்பட்டதாக ஷைலேஷ் நேவால் எனப்படும் வட்டார ராணுவ அலு வலர் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறு வனத்திடம் தெரிவித்தார்.
ஆயுதக்கிடங்குக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரிகளையும், வீரர்களையும், கிடங்கை சுற்றி பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உள்ளே சென்று மீட்டு வந்தனர். இதில், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பல வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு ராணுவ அதிகாரிகளும் 18 ராணுவ வீரர்களும் உடல் கருகி மாண்டனர்.