இந்தியாவில் நவீன அடிமைகள் எண்ணிக்கை பெருகிவருவதாக வும் தற்போது 18 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அடிமை வாழ்வு வாழ்வதாகவும் 'வாக் ஃப்ரீ பவுண்டேஷன்' என்னும் மனித உரிமை அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.4 விழுக்காட்டினர் கொத்தடிமைகள் என்று அந்த அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கொத்தடிமைகளாக வைத்து வேலைவாங்குவது, பிச்சை எடுக்கச் சொல்லி கட்டாயப் படுத்துவது, பாலியல் தொழிலில் தள்ளப்படுவது போன்றவற்றுக் காகப் பயன்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து உலகள விலான கொத்தடிமைப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
167 நாடுகளை உள்ளடக்கிய அந்தப் பட்டியலில் வடகொரியா, உஸ்பெகிஸ்தான், கம்போடியா ஆகியன முதல் மூன்று இடங் களில் உள்ளன. பட்டியலின் முதல் இடத்தில் உள்ள வடகொரியாவின் மொத்த மக்கள்தொகையில் 4.37 விழுக்கட்டினர் கொத்தடிமைகள். இந்நிலையில், அதிகரித்து வரும் மனிதக் கடத்தலை முறி யடிப்பதற்கான ஒட்டுமொத்த வரைவுத் திட்டம் ஒன்றை இந்தி யாவின் மகளிர், குழந்தை மேம் பாட்டு அமைச்சர் மேனகா காந்தி அறிமுகம் செய்துள்ளார். தற்போதுள்ள கடத்தலுக்கு எதிரான சட்டங்கள் அனைத்தை யும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த வரைவுத் திட்டம் அமைந்து உள்ளது. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிதக் கடத்தல் சம்பவங்கள் 90 விழுக்காடு அதி கரித்துள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் அத்தகைய 5,466 சம்பவங்கள் பதிவாகியுள்ள தாக தேசிய குற்ற ஆவணப் பதிவு அலுவலகம் தெரிவிக்கிறது.