பணக்கார நாடு; ஏழை மக்கள்

புதுடெல்லி: உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளதாக ‘நியூவேர்ல்ட் வெல்த்’ தெரிவித்தது. முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. முதல் பத்து நாடுகளில் இடம்பெற்றுள்ள சீனா கடந்த 15 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் வேகமாக வளர்ச்சியடைகின்றன. வேகமாக வளரும் நாடுகளில் கடந்த ஆண்டுதான் இந்தியா, இத் தாலியை முந்தியது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, கனடாவையும் இந்தியா முந்தி விடக்கூடும். முதல் 5 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன.

சொத்து, பண வளம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்தப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனிநபர் வருமானத்தை கணக்கிடுகையில் சராசரி இந்திய குடிமகன் இன்னும் ஏழையாகவே இருக்கிறான். “இந்தியாவில் அத்தியாவசிய தேவை களுக்கு கடுமையாக போராட வேண்டிய நிலை நீடிக்கிறது,” என்று அறிக்கையில் குறிப்பிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்