ஊட்டியில் 10 லட்சம் பேர் குவிந்தனர்

ஊட்டி: ஊட்டிக்கு ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துசென்றனர். நடப்பாண்டு தமிழகம் முழுவதும் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஊட்டியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் ஊர் திரும்ப தொடங்கிவிட்டாலும், அரசு ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் இன்னமும் பரவலாகக் காணப்படுகிறது.

Loading...
Load next