2 கிலோ நகை திருடியவர் சிக்கினார்

திருவிடைமருதூர்: பல ஊர்களுக்கும் சென்று நகை விற்பனை செய்யும் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிசங்ர் மகன் விக்னேஷ் என்ற நகை வியாபாரி கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி இரண்டு கிலோ எடை தங்க நகைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு பஸ்சில் அய்யம்பேட்டைக்குச் சென்றார். அங்கு சென்றபோது நகைப் பையைக் காணவில்லை. போலிசில் புகார் செய்தார். கும்பகோணம் சுந்தர பெருமாள்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன், 21, என்பவரை போலிஸ் மடக்கியது. அவர்தான் நகை திருடியவர் என்பதும் மேலும் ஒரு கிலோ நகைகளை பல்வேறு இடங்களில் உள்ள அடகுக் கடைகளில் அவர் அடகு வைத்ததும் ஒரு கிலோ நகைகளை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Loading...
Load next