தமிழக சட்டமன்றம் கூடியது; தொடக்கமே அமைதி, இணக்கம்

சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டம் நேற்று நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அருமை யான முறையில் அமைதியான முறையில் நடந்துகொண்டதை வைத்துப் பார்க்கையில் தொடக் கமே பலரும் பாராட்டும்படியாக இருந்ததாக வர்ணிக்கப்படுகிறது. தமிழகத்தில் 15வது சட்ட சபைக்கான தேர்தல் நடத்தி முடிக் கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை மே 23ஆம் தேதி பதவியேற்றது. 15வது சட்டசபை கடந்த 25ம் தேதி கூடியது. பேரவையின் தற்காலிக தலைவர் செம்மலை முன்னிலை யில் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 230 பேரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

புதிய சபாநாயகர் தனபாலுக்கு நேற்றைய கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில் “திமுக எதிர்கட்சியாக செயல்படுமே தவிர எதிரி கட்சி யாக இருக்காது,” என்றார். கூட்டத்தில் சபாநாயகராக தனபாலும் துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றித் தேர்வு செய்யப் பட்டனர். இருவருக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

“தராசு முள் போல் சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் செயல்பட வேண்டும். ஒரு பக்கம் தேய்ந்தால் கூட நாணயம் செல்லாததாகி விடும் என அண்ணாதுரை கூறி இருக்கிறார். “அவர் சொன்னது போல் அவரது பெயரைத் தாங்கியுள்ள கட்சியாக நாங்கள் செயல்படு வோம். அவையின் மாண்பை மதிக்க வேண்டும். சபாநாயகரின் மரபைக் காக்கும் வகையில் எதிர் கட்சியாக திமுக செயல்படும் என நம்புகிறேன்,” என்றார் முதல்வர்.

Loading...
Load next